மறைந்த பிரணாப் முகர்ஜிக்கு நினைவிடம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்

January 8, 2025

சர்மிஸ்தா முகர்ஜி, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து சந்திப்பு. மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு நினைவிடம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, முன்னாள் ஜனாதிபதியின் மகளான சர்மிஸ்தா முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து இந்த நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்தார். சர்மிஸ்தா முகர்ஜி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட செய்தியில், "இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அவர்களின் சமாதி அமைப்பதற்காக ராஷ்ட்ரிய ஸ்மிருதி வளாகத்தில் (ராஜ்காட் வளாகத்தின் ஒரு பகுதி) ஒரு இடம் […]

சர்மிஸ்தா முகர்ஜி, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து சந்திப்பு.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு நினைவிடம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, முன்னாள் ஜனாதிபதியின் மகளான சர்மிஸ்தா முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து இந்த நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்தார். சர்மிஸ்தா முகர்ஜி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட செய்தியில், "இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அவர்களின் சமாதி அமைப்பதற்காக ராஷ்ட்ரிய ஸ்மிருதி வளாகத்தில் (ராஜ்காட் வளாகத்தின் ஒரு பகுதி) ஒரு இடம் ஒதுக்கப்படுவதாக மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பாபாவுக்கு நினைவிடம் உருவாக்கும் அரசாங்கத்தின் முடிவிற்கு எனது இதயத்திலிருந்து நன்றி. இந்த எதிர்பாராத செயலால் நான் மிகவும் மகிழ்ந்தேன். பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கச் சென்றேன்" என்று பதிவிட்டுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu