மன்மோகன் சிங்கின் நினைவிடத்திற்கு இடம் ஒதுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92), உடல்நலக் குறைவு மற்றும் வயதின் காரணமாக டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தியாவினுள்ளே 7 நாட்கள் துக்கம் கொண்டாடப்படுவதாகவும், துக்க தினமாக உத்தரவிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமருக்கு கடிதம் எழுதி, மன்மோகன் சிங்கின் நினைவிடத்திற்கு இடம் ஒதுக்க மத்திய உள்துறை அமைச்சகத்தை கேட்டுள்ளார். இதனை அடுத்து மன்மோகன் சிங் நினைவிடத்திற்கு இடம் ஒதுக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.