திருப்பதி–காட்பாடி இடையிலான 104 கி.மீ. ரெயில்வே பாதையை இரட்டை வழித்தடமாக மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
திருப்பதி–காட்பாடி இடையிலான 104 கி.மீ. ரெயில்வே பாதையை இரட்டை வழித்தடமாக மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்டத்தின் மொத்த செலவு ரூ.1,332 கோடியாகும். இந்த வளர்ச்சி திட்டம் சுமார் 14 லட்சம் மக்களுக்கு பயனளிக்கும். திருப்பதி ஏழுமலையான் கோவிலும், காலகஸ்தி கோவிலும் செல்லும் பாதை மேம்படும். இதனால் ஆண்டு ஒன்றுக்கு 4 மில்லியன் டன் கூடுதல் சரக்கு போக்குவரத்தும் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.














