பயிற்சி போர் விமானம், கப்பல்கள் வாங்க எச்ஏஎல், எல்&டி நிறுவனங்களுடன் ரூ.9,900 கோடிக்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
பாதுகாப்புத் துறைக்கு பயிற்சி போர் விமானங்கள் மற்றும் பயிற்சி கப்பல்கள் வாங்க, எச்ஏஎல் மற்றும் எல்&டி ஆகிய நிறுவனங்களுடன் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தனித்தனி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.9,900 கோடி ஆகும். இந்த ஒப்பந்தங்கள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின்படி, 70 எச்டிடி-40 ரக விமானங்களை 6 ஆண்டுகளுக்குள் எச்ஏஎல் தயாரித்து விமானப்படையிடம் ஒப்படைக்கும். விமானப்படையில் சேரும் பைலட்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக இந்த விமானங்கள் பயன்படுத்தப்படும். உள்நாட்டு தயாரிப்பை ஊக்குவிப்பதற்காக, மத்திய அரசு பாதுகாப்புத் துறையில் சில ராணுவ தளவடங்களை இறக்குமதி செய்ய தடை விதித்தது. இந்நிலையில் எச்ஏஎல் நிறுவனத்திடமிருந்து பயிற்சி விமானங்கள் வாங்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.