மத்திய அரசு இயற்கை எரிவாயு விலை குறைப்பு

மத்திய அரசு இயற்கை எரிவாயு விலையை குறைத்துள்ளதால் மின்வாரியத்துக்கு எரிவாயு மின்னுற்பத்தி செலவு 25 சதவீதம் வரை குறைந்துள்ளது. சென்னையில் இயற்கை எரிவாயு கிடைக்காததால் பேசின்பிரிட்ஜ் மின்நிலையத்தில் நாப்தா பயன்படுத்தியும், மற்ற மின்நிலையங்களில் மத்திய அரசின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்திடம் இருந்து இயற்கை எரிவாயு வாங்கிப் பயன்படுத்தியும் மின்னுற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மின்நிலையங்களில் தினமும் சராசரியாக 50 முதல் 50 லட்சம் யூனிட் மின்னுற்பத்தி செய்யப்படுகிறது. மின்வாரியம் தினமும் 53 ஆயிரம் எம்எம்பிடியூ மதிப்புள்ள […]

மத்திய அரசு இயற்கை எரிவாயு விலையை குறைத்துள்ளதால் மின்வாரியத்துக்கு எரிவாயு மின்னுற்பத்தி செலவு 25 சதவீதம் வரை குறைந்துள்ளது.

சென்னையில் இயற்கை எரிவாயு கிடைக்காததால் பேசின்பிரிட்ஜ் மின்நிலையத்தில் நாப்தா பயன்படுத்தியும், மற்ற மின்நிலையங்களில் மத்திய அரசின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்திடம் இருந்து இயற்கை எரிவாயு வாங்கிப் பயன்படுத்தியும் மின்னுற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மின்நிலையங்களில் தினமும் சராசரியாக 50 முதல் 50 லட்சம் யூனிட் மின்னுற்பத்தி செய்யப்படுகிறது.

மின்வாரியம் தினமும் 53 ஆயிரம் எம்எம்பிடியூ மதிப்புள்ள எரிவாயுவை பயன்படுத்துகிறது. ஒரு யூனிட் எரிவாயு மின்னுற்பத்தி செலவு ரூ.8 வரை இருந்தது. தற்போது மத்திய அரசு ஒரு எம்எம்பிடியூ எரிவாயு விலையை ரூ.533 ஆக குறைத்துள்ளதால் ஒரு யூனிட் மின்னுற்பத்தி செலவு ரூ.6 ஆக குறைந்துள்ளது. இதனால் ஒட்டுமொத்தமாக மின்வாரியத்துக்கு 25 சதவீதம் வரை செலவு மிச்சமாகி உள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu