மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு

September 29, 2022

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 4% உயர்த்துவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 34% அகவிலைப்படி கொடுக்கப்பட்டு வந்த நிலையில், அது 38 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம், 47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.62 லட்சம் ஓய்வூதியர்களும் பயனடைவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஜூலை ஒன்றாம் தேதி முதல் இது செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், மூன்று மாத நிலுவை அகவிலைப்படித்தொகை அடுத்த மாத சம்பளத்துடன் […]

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 4% உயர்த்துவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 34% அகவிலைப்படி கொடுக்கப்பட்டு வந்த நிலையில், அது 38 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம், 47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.62 லட்சம் ஓய்வூதியர்களும் பயனடைவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஜூலை ஒன்றாம் தேதி முதல் இது செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், மூன்று மாத நிலுவை அகவிலைப்படித்தொகை அடுத்த மாத சம்பளத்துடன் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆறு மாதத்திற்கு ஒரு முறை, அரசு ஊழியர்களின் அகவிலைப்படியில் திருத்தம் மேற்கொள்ளப்படும். ஆனால், கொரோனா பரவல் காரணமாக 2020 ஆம் ஆண்டு அகவிலைப்படியில் மாற்றம் கொடுக்கப்படவில்லை. இதனால் கடந்த வருட ஜூலை மாதத்தில், 17% ஆக இருந்த அகவிலைப்படி 28 சதவீதமாக உயர்த்தப்பட்டது. அதன்பின்னர், மூன்றே மாத இடைவெளியில், அக்டோபர் மாதத்தில் மேலும் மூன்று சதவீதம் உயர்த்தப்பட்டு, 31 சதவீதமானது. அதன் பின்னர், நடப்பு ஆண்டின் தொடக்கத்தில், மேலும் 3% அகவிலைப்படி அதிகரிக்கப்பட்டு, 34 சதவீதமாக கொடுக்கப்பட்டது. தற்போது, இது 38 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

விலைவாசி உயர்வு, பணவீக்க விகிதம், நுகர்வோர் குறியீட்டு எண் போன்றவற்றை கணக்கில் கொண்டு மத்திய ரிசர்வ் வங்கி அகவிலைப்படியை நிர்ணயம் செய்கிறது. பொது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இது உயர்த்தி வழங்கப்படுகிறது. தற்போதைய உயர்வு அறிவிப்பால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே வேளையில், அகவிலைப்படி உயர்வால், மத்திய அரசுக்கு ஆண்டுக்கு 5,591.36 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் என இரண்டுக்கும் சேர்த்து, ஆண்டுக்கு 12,852.56 கோடி ரூபாய் செலவாகும் என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu