இந்தியாவில், ஒட்டுமொத்த நாடு முழுவதும் Indian Standard Time (IST) நேரத்தை கட்டாயமாக்கும் புதிய வரைவு விதிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இந்தியாவில், ஒட்டுமொத்த நாடு முழுவதும் Indian Standard Time (IST) நேரத்தை கட்டாயமாக்கும் புதிய வரைவு விதிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. தொலைத்தொடர்பு, வங்கி, பாதுகாப்பு, 5ஜி, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒரே நேரத்தை பின்பற்றுதல் உறுதி செய்ய இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வரைவு விதிகள் குறித்து பொதுமக்கள் பிப்ரவரி 14-ம் தேதிக்குள் தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கலாம். இந்த விதிகள், அதிகாரபூர்வ, வர்த்தக, நிதி, நிர்வாகம், சட்ட ஒப்பந்தங்கள் உள்ளிட்ட அனைத்து பயன்பாடுகளிலும் IST-ஐ பின்பற்ற வலியுறுத்துகிறது. IST தவிர பிற நேர திட்டங்களைப் பின்பற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது, மேலும் இதை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனினும், அறிவியல் ஆய்வு, வானியல், கடற்பயணம் உள்ளிட்ட குறிப்பிட்ட துறைகளுக்கு அரசின் முன் அனுமதியுடன் இந்த விதிகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.