ஆன்லைன் விற்பனை நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019ஐ மீறுவதால் கார் சீட் பெல்ட் அலாரம் ஸ்டாப்பர் க்ளிப்களை விற்பனை செய்யும் முதல் 5 இணைய வர்த்தக தளங்களான அமேசான் , பிளிப்கார்ட் ,ஸ்னாப்டீல் , ஷாப்க்லூஸ், மீஷோ ஆகியவற்றிற்கு எதிராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காரில் சீட் பெல்ட் அணியாவிட்டால் எச்சரிக்கும் அலாரத்தை நிறுத்தும் கார் சீட் பெல்ட் அலாரம் ஸ்டாப்பர் க்ளிப்களை விற்பனை செய்யும் ஆன்லைன் தளங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், ஆலோசனை வழங்கவும் நுகர்வோர் விவகார ஆணையம் புகார் கூறியுள்ளது.
இதையடுத்து அனைத்து கார் சீட் பெல்ட் அலாரம் ஸ்டாப்பர் க்ளிப்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய உதிரிபாகங்களை நிரந்தரமாக நீக்குமாறு இணைய வர்த்தக தளங்களுக்கு மத்திய அரசு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.