ஜல்லிக்கட்டுக்கு மத்தியஅரசு ஆதரவு

December 7, 2022

தமிழகத்தில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டுக்கு நாங்கள் ஆதரவு என மத்திய அரசு வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஜல்லிக்கட்டு போன்ற மிருகங்களை கொண்டு நடத்தப்படும் விளையாட்டுகளை அனுமதிக்கும் வகையில் மாநில அரசுகளால் மேற்கொள்ளப்பட்ட சட்ட திருத்தங்கள் மற்றும் புதிய விதிமுறைகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தில் ஐந்தாவது நாளாக நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், கலாச்சாரத்தை காப்பது […]

தமிழகத்தில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டுக்கு நாங்கள் ஆதரவு என மத்திய அரசு வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஜல்லிக்கட்டு போன்ற மிருகங்களை கொண்டு நடத்தப்படும் விளையாட்டுகளை அனுமதிக்கும் வகையில் மாநில அரசுகளால் மேற்கொள்ளப்பட்ட சட்ட திருத்தங்கள் மற்றும் புதிய விதிமுறைகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தில் ஐந்தாவது நாளாக நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில், கலாச்சாரத்தை காப்பது என்பது அந்தந்த அரசுகளின் கடமை. இதை அரசியல் சாசனமும் பிரிவு 29ல் தெளிவாகக் கூறியுள்ளது.மேலும், ஜல்லிக்கட்டு தொடர்பான புகைப்பட ஆதாரங்களும் அளிக்கப்பட்டது. இதையடுத்து மத்திய அரசு தரப்பில், ஜல்லிக்கட்டு விவகாரத்தை ஆய்வு செய்த நிபுணர் குழு அதில் எந்த விதி மீறல்களும் இல்லை என தெளிவாக தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்த சிறப்பு சட்டத்திற்கு ஜனாதிபதியும் ஒப்புதல் வழங்கியுள்ளார். ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு ஆதரவு என்பது தான் ஒன்றிய அரசின் நிலைப்பாடாக உள்ளது. அதற்கு தடை விதிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu