கபசுர குடிநீரை வாங்க தமிழகத்துடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை

January 2, 2023

கபசுர குடிநீரை வாங்க தமிழகத்துடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. சீனா, ஜப்பான், தென்கொரியா, தைவான் ஹாங்காங் போன்ற வெளிநாடுகளில் உருமாறிய பி.எப்.-7 கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதன் தாக்கம் இந்தியாவிலும் வந்து விட்டது. இதற்காக மத்திய அரசு பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மாற்று மருந்தான சித்த மருத்துவ கபசுர குடிநீர் கடந்த 2021-ம் ஆண்டு தமிழகத்தில் அதிக மக்கள் […]

கபசுர குடிநீரை வாங்க தமிழகத்துடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

சீனா, ஜப்பான், தென்கொரியா, தைவான் ஹாங்காங் போன்ற வெளிநாடுகளில் உருமாறிய பி.எப்.-7 கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதன் தாக்கம் இந்தியாவிலும் வந்து விட்டது. இதற்காக மத்திய அரசு பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மாற்று மருந்தான சித்த மருத்துவ கபசுர குடிநீர் கடந்த 2021-ம் ஆண்டு தமிழகத்தில் அதிக மக்கள் பயன்படுத்தி வந்தனர். தமிழக அரசின் 'டாம்கால்' நிறுவனம் கபசுர பொடியை அதிக அளவு தயாரித்து வருகிறது.

தமிழகத்தில் தயாரிக்கும் இந்த கபசுர குடிநீர் பவுடரை கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி மருந்தாக இந்தியா முழுவதும் வினியோகிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இதற்காக கபசுர குடிநீர் பவுடரை வாங்குவதற்கு தமிழக அரசுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu