தலாய் லாமாவுக்கு 35-40 கமாண்டோக்களுடன் மத்திய உள்துறை, கூடுதல் பாதுகாப்பு வழங்க முடிவெடுத்துள்ளது.
இந்தியாவில் திபெத்தைச் சேர்ந்த புத்த மதத் துறவி தலாய் லாமாவுக்கு உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத் துறை தகவல் தெரிவித்துள்ளது. இதையடுத்து, அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
இதன் பின்னர், தலாய் லாமாவுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்குவதற்காக, மத்திய உள்துறை அமைச்சகம் சி.ஆர்.பி.எஃப் படையினரால் பாதுகாப்பு பணியில் 35 முதல் 40 கமாண்டோக்களை ஈடுபடுத்த தீர்மானித்துள்ளது.














