முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் மு.கருணாநிதி பெயரில் நினைவு நாணயம் வெளியிட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரான கலைஞருக்கு, "முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் மு.கருணாநிதி என்ற பெயரில் நூறு ரூபாய் மதிப்பிலான நினைவு நாணயம் வெளியிட தமிழக அரசு விரும்பியது. அதனை தொடர்ந்து மத்திய நிதி அமைச்சகத்திடம் கடந்த வருடம் கோரிக்கை வைத்தது. மேலும் கலைஞரின் நூறாவது பிறந்த ஜூன் மூன்றாம் தேதி இந்த நாணயத்தை வெளியிட திட்டமிட்டு இருந்த நிலையில் பல்வேறு காரணங்களால் குறிப்பிட்ட தேதியில் நாணயத்தை வெளியிடப்பட முடியவில்லை. இன்னிலையில் நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாணயத்திற்கான அனுமதிக்கோப்பில் கையெழுத்திட்டுள்ளார். அதன்படி முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் மு.கருணாநிதி என்ற பெயரில் நினைவு நாணயம் வெளியிடப்பட உள்ளது. இந்த நாணயத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் அவரின் பெயருடன் தமிழ் வெல்லும் என்ற வாசகம் இடம் பெற உள்ளது. இதற்கான உத்தரவு விரைவில் மத்திய அரசின் கெஜட்டில் வெளியாக உள்ளது














