சென்னையில் கட்டப்பட உள்ள இரண்டாவது விமான நிலையமான பரந்தூர் விமான நிலையத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
சென்னையில் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்பட உள்ளன. இங்கு புதிய பசுமைவெளி விமான நிலையம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பரந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை உள்ளடக்கிய ஐந்தாயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இதற்காக நிலமெடுக்கும் பணிகள் மற்றும் விமான நிலையம் அமைக்கும் பணிகளை மாநில அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு தொழில் துறை மேம்பாட்டு கழகம் மேற்கொண்டு வருகிறது. இதற்கு அனுமதி கேட்டு மத்திய அரசின் சிவில் விமான போக்குவரத்துக்கு அமைச்சகத்திற்கு டிட்கோ கடிதம் வழங்கியிருந்தது. இந்நிலையில் பரந்தூர் விமான நிலையத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.