இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு 54 ஆயிரத்து 760 டன் வெங்காயம் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு மார்ச் 31ஆம் தேதி வரை தடை விதித்திருந்தது. இந்நிலையில் வங்காளதேசம், மொரிஷியஸ், பூடான், பக்ரைன் ஆகிய நாடுகளுக்கு வெங்காய ஏற்றுமதி செய்ய தற்போது மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி 50000 டன் வெங்காயம் வங்காளதேசத்திற்கும், 1700 டன் வெங்காயம் மொரிஷியஸ் க்கும், 3000 டன் பக்ரைனுக்கும், 560 டன் பூடானுக்கும் ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்துள்ளதாக நுகர்வோர் விவகார செயலாளர் தெரிவித்துள்ளார். வெளியுறவு அமைச்சரிடம் இருந்து வந்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.