பாரத் தால் பெயரில் மானிய விலையில் பருப்பு விற்பனை - மத்திய அரசு தொடக்கம்

November 14, 2023

மத்திய அரசு, கடந்த ஜூலை மாதம் முதல், மானிய விலையில் பருப்பு விற்பனையை வருகிறது. பாரத் தால் என்ற பெயரில் ஒரு கிலோ பருப்பு 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தேசிய வேளாண் கூட்டுறவு அமைப்புகள் மற்றும் வேளாண் இயக்கங்கள் மூலம், சென்னா பருப்பு விற்பனை இவ்வாறு நடத்தப்பட்டு வருகிறது. இம்மாத தொடக்கத்தில்,’ பாரத் ஆட்டா’ என்ற பெயரில், மானிய விலையில் கோதுமை விற்பனையில் மத்திய அரசு களமிறங்கியது. மக்களுக்கு வசதியாக, வேளாண் கூட்டுறவு அமைப்புகள் தவிர, 800 […]

மத்திய அரசு, கடந்த ஜூலை மாதம் முதல், மானிய விலையில் பருப்பு விற்பனையை வருகிறது. பாரத் தால் என்ற பெயரில் ஒரு கிலோ பருப்பு 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தேசிய வேளாண் கூட்டுறவு அமைப்புகள் மற்றும் வேளாண் இயக்கங்கள் மூலம், சென்னா பருப்பு விற்பனை இவ்வாறு நடத்தப்பட்டு வருகிறது.

இம்மாத தொடக்கத்தில்,’ பாரத் ஆட்டா’ என்ற பெயரில், மானிய விலையில் கோதுமை விற்பனையில் மத்திய அரசு களமிறங்கியது. மக்களுக்கு வசதியாக, வேளாண் கூட்டுறவு அமைப்புகள் தவிர, 800 மொபைல் வேன்கள் மூலம் கோதுமை மாவு விற்கப்பட்டு வருகிறது. தற்போது, பாரத் தால் விற்பனையும் இதே மொபைல் வேன்களில் இணைக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. அத்துடன், துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு போன்ற அனைத்து பருப்பு வகைகளும், அரசாங்க சேமிப்பு கிடங்கில் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu