கச்சா எண்ணெய் மீதான விண்டுபால் வரியை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. அதே வேளையில், டீசல் மற்றும் விமான எரிபொருளுக்கான விண்டுபால் வரி மாற்றமின்றி தொடர்கிறது.
பெட்ரோலியம் சார்ந்த கச்சா எண்ணெய் மீதான விண்டுபால் வரி ஒரு டன்னுக்கு 3250 ரூபாயாக இருந்தது. இது தற்போது 6000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் மற்றும் விமான எரிபொருள் மீதான விண்டுபால் வரி பூஜ்ஜியமாக தொடர்கிறது. மத்திய நிதி அமைச்சகம் இந்த தகவலை தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் 15ஆம் தேதி, கச்சா எண்ணெய் மீதான வேண்டுபால் வரி 5200-லிருந்து 3250 ரூபாயாக குறைக்கப்பட்டது. ஆனால், இன்று முதல் 6000 ரூபாயாக உயர்த்தப்படுவது குறிப்பிடத்தக்கது.