மஹாரத்னா நிறுவனமான ஓஎன்ஜிசியிடம் இருந்து, மத்திய அரசு, 5001 கோடி ரூபாய் ஈவுத்தொகையை திங்கட்கிழமை அன்று பெற்றுள்ளது. முதலீடுகள் மற்றும் பொது சொத்து நிர்வாக துறையின் செயலாளர் துகின் கண்டா பாண்டே இதனை அறிவித்துள்ளார்.
ஈவுத்தொகை என்பது நிறுவனத்தின் வருவாயை பங்குதாரர்களுக்கு பிரித்து கொடுப்பதாகும். இதற்கு நிறுவனத்தின் நிர்வாகக் குழு ஒப்புதல் வழங்க வேண்டும். அதன்படி, அரசாங்கத்திற்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் மத்திய அரசுக்கு ஈவுத்தொகை வழங்கி வருகின்றன. முன்னதாக, நவம்பர் 11ஆம் தேதி பாரத் பெட்ரோலியம் நிறுவனத்திடம் இருந்து 690 கோடி ரூபாய் ஈவுத்தொகையாக பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.














