மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய வரிகளை மத்திய அரசு விடுவித்துள்ளது. மொத்தம் 72961.21 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஜனவரி 10ஆம் தேதி, மாநில அரசுகளுக்கான வரி பகிர்வு தொகையை மத்திய அரசு வழங்குவதாக இருந்தது. அதனை, தற்போது, முன்கூட்டியே வழங்கியுள்ளது. மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, டிசம்பர் 11ஆம் தேதி, வரி பகிர்வுகள் விடுவிக்கப்பட்டுள்ளன. அந்த அறிக்கையின் படி, தமிழகத்துக்கு 2976.1 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களில் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களை மேற்கொள்வதற்கும், சமூக நலன் மற்றும் வளர்ச்சி திட்டங்களை முன்னெடுப்பதற்கும் இந்த நிதி கொடுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக, உத்திரபிரதேச மாநிலத்திற்கு 13088.51 கோடி ரூபாய் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.