5ஜி சேவை: 50 நகரங்களின் பட்டியலை பகிர்ந்த மத்திய அரசு

December 14, 2022

இந்தியாவில் 5ஜி சேவைகள் தொடங்கப்பட்டுள்ள 50 நகரங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் 14 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 50 நகரங்களில் 5ஜி சேவைகள் தொடங்கப்பட்டுள்ளதாக இன்று மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ள 50 நகரங்களில் 33 நகரங்கள் குஜராத்தில் உள்ளன. இந்த பட்டியலில் மகாராஷ்டிராவில் இருந்து 3 நகரங்களும், மேற்கு வங்கம் மற்றும் உத்தரபிரதேசத்தில் இருந்து தலா 2 நகரங்களும் அடங்கும். மேலும், டெல்லி, சென்னை, கர்நாடகா, தெலுங்கானா, ராஜஸ்தான், […]

இந்தியாவில் 5ஜி சேவைகள் தொடங்கப்பட்டுள்ள 50 நகரங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் 14 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 50 நகரங்களில் 5ஜி சேவைகள் தொடங்கப்பட்டுள்ளதாக இன்று மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ள 50 நகரங்களில் 33 நகரங்கள் குஜராத்தில் உள்ளன. இந்த பட்டியலில் மகாராஷ்டிராவில் இருந்து 3 நகரங்களும், மேற்கு வங்கம் மற்றும் உத்தரபிரதேசத்தில் இருந்து தலா 2 நகரங்களும் அடங்கும்.

மேலும், டெல்லி, சென்னை, கர்நாடகா, தெலுங்கானா, ராஜஸ்தான், ஹரியானா, அசாம், கேரளா, பீகார் மற்றும் ஆந்திர பிரதேசத்தில் உள்ள ஒரு சில நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்தியாவில் அக்.1 முதல், ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய நிறுவனங்கள் 5ஜி சேவையை வழங்குகின்றன. விரைவில் பிஎஸ்என்எல்-ல் 5ஜி சேவை வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu