கைப்பேசிகளில் பிரீ இன்ஸ்டால் செய்யப்படும் செயலிகளை நீக்குவது கட்டாயமாக்கப்படும் - அறிக்கை

March 14, 2023

கைப்பேசிகளில், பொதுவாகவே சில செயலிகள் இணைத்து வெளியிடப்படும். அதாவது, இவை பிரீ இன்ஸ்டால் செய்யப்பட்டு, நம்மால் நீக்க முடியாதவையாக இருக்கும். இவ்வாறு கொடுக்கப்படும் செயலிகளுக்கு, இனிமேல் ‘நீக்கும் வசதி’ கொடுக்க வேண்டும் என்று கைப்பேசி நிறுவனங்களுக்கு புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. பாதுகாப்பு சார்ந்த காரணங்களுக்காக இந்திய அரசு பல்வேறு புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், “ப்ரீ இன்ஸ்டால் செய்யப்பட்ட செயல்களை நீக்குவது கைபேசி நிறுவனங்களுக்கு கட்டாயமாக்கப்படும்” என்ற அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதனால், […]

கைப்பேசிகளில், பொதுவாகவே சில செயலிகள் இணைத்து வெளியிடப்படும். அதாவது, இவை பிரீ இன்ஸ்டால் செய்யப்பட்டு, நம்மால் நீக்க முடியாதவையாக இருக்கும். இவ்வாறு கொடுக்கப்படும் செயலிகளுக்கு, இனிமேல் ‘நீக்கும் வசதி’ கொடுக்க வேண்டும் என்று கைப்பேசி நிறுவனங்களுக்கு புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

பாதுகாப்பு சார்ந்த காரணங்களுக்காக இந்திய அரசு பல்வேறு புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், “ப்ரீ இன்ஸ்டால் செய்யப்பட்ட செயல்களை நீக்குவது கைபேசி நிறுவனங்களுக்கு கட்டாயமாக்கப்படும்” என்ற அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதனால், சாம்சங், ஷாவ்மி, விவோ, ஆப்பிள் உள்ளிட்ட கைபேசிகளின் வெளியீட்டு தேதிகள் தள்ளிப் போகும் நிலை உருவாகியுள்ளது.

இது தொடர்பாக, இந்திய தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ப்ரீ இன்ஸ்டால் செய்யப்படும் செயலிகள் மூலமாக வாடிக்கையாளர் தரவுகள் கசிய விடப்படுகின்றன. இது சீனா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விற்கப்படுவதால், இவை தேசிய பாதுகாப்பு சார்ந்த சிக்கலாக உள்ளது. எனவே, செயலிகளை நீக்கும் வசதி கொண்டு வரப்பட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu