16 நாட்களுக்குப் பிறகு செந்தூர் எக்ஸ்பிரஸ் மீட்பு

January 2, 2024

திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட செந்தூர் எக்ஸ்பிரஸ் தண்டவாளம் சேதம் அடைந்ததால் ஸ்ரீவைகுண்டத்தில் நிறுத்தப்பட்டது. நெல்லை,தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கடந்த 17,18 ஆம் தேதிகளில் பெய்த கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தண்டவாளங்களில் மண்ணரிப்பு, கற்கள் பெயர்ந்து சேதம் ஏற்பட்டது. இந்நிலையில் திருச்செந்தூரிலிருந்து 800 பயணிகளுடன் கடந்த 17ஆம் தேதி சென்னை நோக்கி சென்ற செந்தூர் எக்ஸ்பிரஸ் தண்டவாளம் சேதம் அடைந்ததால் ஸ்ரீவைகுண்டத்தில் நிறுத்தப்பட்டது. இதில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். […]

திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட செந்தூர் எக்ஸ்பிரஸ் தண்டவாளம் சேதம் அடைந்ததால் ஸ்ரீவைகுண்டத்தில் நிறுத்தப்பட்டது.

நெல்லை,தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கடந்த 17,18 ஆம் தேதிகளில் பெய்த கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தண்டவாளங்களில் மண்ணரிப்பு, கற்கள் பெயர்ந்து சேதம் ஏற்பட்டது. இந்நிலையில் திருச்செந்தூரிலிருந்து 800 பயணிகளுடன் கடந்த 17ஆம் தேதி சென்னை நோக்கி சென்ற செந்தூர் எக்ஸ்பிரஸ் தண்டவாளம் சேதம் அடைந்ததால் ஸ்ரீவைகுண்டத்தில் நிறுத்தப்பட்டது. இதில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இருப்பினும் ரயில் நிலையத்தை சுற்றி வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் ஹெலிகாப்டர் மூலமும், தேசிய மீட்பு படையினர் மூலமும் மூன்று நாட்களுக்கு பின்னர் பயணிகள் மீட்கப்பட்டனர். இதனை தொடர்ந்து ஸ்ரீவைகுண்டத்தில் கடந்த 16 நாட்களாக சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது நெல்லையிலிருந்து டீசல் என்ஜின் ஸ்ரீவைகுண்டம் கொண்டு செல்லப்பட்டு அதன் மூலம் செந்தூர் எக்ஸ்பிரஸ் மீட்டு நெல்லை கொண்டு செல்லப்பட்டது. மேலும் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து ஆழ்வார் திருநகரி வழியாக நாசரேத் செல்லும் பகுதிகள் இன்னும் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதன் சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் செந்தூர் எக்ஸ்பிரஸ் 5ஆம் தேதி ஐந்தாம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் ரயில் வழக்கம் போல இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu