ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல் நிறுவனத்தின் அமெரிக்க பிரிவு தலைவர் ராஜினாமா

December 8, 2022

ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல் நிறுவனத்தின் அமெரிக்க பிரிவு தலைமை செயல் அதிகாரி மார்க் புஷ் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு, JSW ஸ்டீல் நிறுவனத்தில், மார்க் புஷ் பணியில் சேர்ந்தார். அவர், அமெரிக்காவில் கட்டமைக்கப்பட்டு வரும் நிறுவனத்தின் நிலையங்கங்களை பொறுப்பேற்று கண்காணித்து வந்தார். வரும் 2023ம் ஆண்டு, கட்டமைப்பில் உள்ள பேடவுன் திட்டத்தை இந்த நிறுவனம் செயல்படுத்த உள்ள நிலையில், இவரது ராஜினாமா செய்தி வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தத் திட்டம் […]

ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல் நிறுவனத்தின் அமெரிக்க பிரிவு தலைமை செயல் அதிகாரி மார்க் புஷ் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு, JSW ஸ்டீல் நிறுவனத்தில், மார்க் புஷ் பணியில் சேர்ந்தார். அவர், அமெரிக்காவில் கட்டமைக்கப்பட்டு வரும் நிறுவனத்தின் நிலையங்கங்களை பொறுப்பேற்று கண்காணித்து வந்தார். வரும் 2023ம் ஆண்டு, கட்டமைப்பில் உள்ள பேடவுன் திட்டத்தை இந்த நிறுவனம் செயல்படுத்த உள்ள நிலையில், இவரது ராஜினாமா செய்தி வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தத் திட்டம் JSW நிறுவனத்தின் அமெரிக்க திட்டங்களில் மிகவும் முக்கியமானதாகும். புதிய தலைமை செயல் அதிகாரி நியமிக்கப்படும் வரை, நிறுவனத்தின் தற்போதைய தலைமை அதிகாரி கிரேக் மான்பிரெட், மார்க் புஷ் வகித்து வந்த பொறுப்புகளை ஏற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu