மழைக்காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி அலுவலர்களுக்கு சான்றிதழ்கள்

January 31, 2023

சென்னையில் மழை வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்த நிகழ்ச்சி மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் இன்று மதியம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், கொரோனாவை கட்டுப்படுத்திய பிறகு உடனே அதிகப்படியான மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது. இதில் நமது அரசு செயல்பட்ட விதத்தை ஊடகங்களும், பொது மக்களும் பாராட்டினார்கள். அனைத்து பணிகளையும் ஒருங்கிணைத்து அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மேயர் பிரியா, மாநகராட்சி கமிஷனர் […]

சென்னையில் மழை வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சி மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் இன்று மதியம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், கொரோனாவை கட்டுப்படுத்திய பிறகு உடனே அதிகப்படியான மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது. இதில் நமது அரசு செயல்பட்ட விதத்தை ஊடகங்களும், பொது மக்களும் பாராட்டினார்கள். அனைத்து பணிகளையும் ஒருங்கிணைத்து அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மேயர் பிரியா, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட அனைவரும் 24 மணி நேரமும் பணியாற்றினார்கள்.

சென்னையில் முதல் முறை மழை வெள்ளத்தை பாடமாக வைத்துக் கொண்டு செயல்பட்டோம். சென்னையில் மழை வெள்ளம் ஏற்பட்ட போது, நெடுஞ்சாலை துறை, நீர்வளத்துறை, குடிநீர் வழங்கல் துறை, காவல்துறை, மின்சாரத்துறை உள்ளிட்ட 5 துறைகளும் சிறப்பாக பணியாற்றியது என்றார். நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங்பேடி, பொறியாளர்கள், அலுவலர்கள், ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட 44 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu