அமெரிக்க அதிகாரிகளுக்கு 25 கோடி டாலர்கள் மதிப்பிலான லஞ்சம் கொடுத்து, சூரிய மின்சாரம் விநியோகம் தொடர்பான முதலீட்டுகளைப் பெற்றதாக அதானி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதானி, தனது தவறை மறைத்து, அமெரிக்க முதலீட்டாளர்களிடமிருந்து பெரும் தொகையை திரட்டினா் என்றும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து நியூயார்க் பெடரல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதானியின் உறவினர் சாகர் அதானி, வினீத் ஜெயின் உள்ளிட்ட 6 பேர் மீது அமெரிக்கா புகார் அளித்துள்ளது. இதே புகாரில், அமெரிக்கா பங்கு பரிவர்த்தனை ஆணையமும் வழக்கு தொடர்ந்துள்ளது. அதானி குழுமம், பங்குகளை போலியாக அதிகரிப்பதாக ஹிண்டன்பர்க் அறிக்கை கூறியது.














