தமிழ்நாட்டில் எதிர்வரும் நாட்களில் அதிக கனமழை வரவிருக்கிறது. இதனால் சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை நாளை மறுநாள் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த ஒரு வாரமாக, தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது.இந்நிலையில் இன்று அதிகாலை 5:30 மணிக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாகியுள்ளது, இதனால் வட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை ஆகிய மாவட்டங்களில் அதிக கனமழையை எதிர்பார்க்கின்றனர். மேலும் சென்னைக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.