தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு மழை வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம்,புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று முதல் செவ்வாய்க்கிழமை வரை லேசான முதல் கனமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்று சுழற்சி கேரளாவை நோக்கி நகர்ந்து குளிர்ச்சியான காற்று வீசப்பட்டு வருகிறது. மேலும் குறிப்பாக சனிக்கிழமையில் தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.