இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக இன்று முதல் அடுத்த ஆறு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் 8ம் தேதி வரை ஒரு சில இடங்களிலும் மிதமான மற்றும் லேசான மழை பெய்யக்கூடும். அதேபோல் சில இடங்களில் வெப்பம் 100 டிகிரி முதல் 104 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் இருக்கும். இது வழக்கத்தை விட 4 டிகிரி வரை அதிகரிக்கும். அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் மேகமூட்டத்துடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.














