தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் மழை வாய்ப்பு

April 13, 2024

தமிழகத்தில் இன்று எட்டு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளில் மேல் வளிமண்டல கீழ டுக்குகளில் காற்று திசை மாறுபாடு ஏற்படுகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள ஒரு சில இடங்களிலும் புதுவை காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழ் கடலோர பகுதிகள் மற்றும் தென் […]

தமிழகத்தில் இன்று எட்டு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்னிந்திய பகுதிகளில் மேல் வளிமண்டல கீழ டுக்குகளில் காற்று திசை மாறுபாடு ஏற்படுகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள ஒரு சில இடங்களிலும் புதுவை காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழ் கடலோர பகுதிகள் மற்றும் தென் கேரளா கடலோர பகுதிகளில் இன்று அதிக வேகத்தில் காற்று வீச கூடும் எனவும் இதனால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. அதேபோல் தமிழகத்தில் மயிலாடுதுறை, நாகை, இராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, நெல்லை, குமரியில் இன்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu