தமிழகத்தில் இன்று முதல் ஆறு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி மற்றும் ஆகிய மாநிலங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அக்டோபர் நான்காம் தேதி முதல் எட்டாம் தேதி வரை இந்த நிலை நீடிக்கும். தமிழகத்தை நோக்கி வீசும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் கூறியுள்ளார். மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரம் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மழை பெய்யக்கூடும். இதனால் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று வீசப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.