தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது இதனால் வேலூரில் நேற்று இரவில் இருந்து விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வழக்கம் போல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, திருச்சி, தர்மபுரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.