ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பிரதமர் மோடியிடம் ஏழு முக்கிய கோரிக்கைகளை வைத்துள்ளார்.
பிரதமர் மோடி மற்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று சந்தித்தனர். அப்போது பிரதமர் மோடியிடம் ஏழு முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற ஒத்துழைக்க வேண்டும் என சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளார். அதில் ஆந்திர மாநில வளர்ச்சிக்கு அதிக அளவில் நிதி உதவி வழங்க வேண்டும். போலவரம் திட்ட கட்டுமானத்திற்கும் தலைநகர் அமராவதியில் அரசு அலுவலகங்கள் மற்றும் உள்கட்ட அமைப்புகளுக்கு விரிவான நிதி உதவி வழங்க வேண்டும், தொழில் வளர்ச்சிக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட 7 முக்கிய கோரிக்கைகளை முன் வைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து மத்திய மந்திரிகள் நிதின் கட்கரி, சிவராஜ் கோயல் ஆகியோரை சந்தித்து பேசிய நிலையில் இன்று மாலை டெல்லியில் இருந்து ஆந்திரா திரும்புகிறார்