சந்திரசேகர ராவ் இரண்டு நாட்களுக்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதன் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற்ற அன்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில் அனைத்து கட்சிகளும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஐந்தாம் தேதி பிஆர்எஸ் தலைவர் சந்திரசேகர ராவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் காங்கிரஸ் உறுப்பினர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக புகார் எழுந்தது. இதனால் சந்திரசேகர ராவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில் தேர்தல் நடத்த விதிமுறைகளை மீறியதாக 48 மணி நேரம் சந்திரசேகர ராவ் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது என தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. அதன்படி நேற்று இரவு 8 மணி முதல் இந்த தற்காலிக தடை அமலுக்கு வந்துள்ளது.