125 அடி உயர அம்பேத்கர் சிலை சந்திரசேகர ராவ் திறந்தார்

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதில் நிறுவப்பட்டுள்ள, 125 அடி உயர அம்பேத்கர் சிலையை, அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் திறந்து வைத்தார். ஹைதராபாதில் ஹுசைன் சாகர் ஏரிக்கரையோரம், 50 அடி உயர பீடத்தில் 125 அடி உயர அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டுள்ளது. 11.4 ஏக்கரில், 146 கோடி ரூபாய் செலவில் 360 டன் ஸ்டீல், 114 டன் வெண்கலத்துடன் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அம்பேத்கரின் 132வது பிறந்த நாளை ஒட்டி, இந்த 125 அடி உயர அம்பேத்கர் […]

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதில் நிறுவப்பட்டுள்ள, 125 அடி உயர அம்பேத்கர் சிலையை, அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் திறந்து வைத்தார்.

ஹைதராபாதில் ஹுசைன் சாகர் ஏரிக்கரையோரம், 50 அடி உயர பீடத்தில் 125 அடி உயர அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டுள்ளது. 11.4 ஏக்கரில், 146 கோடி ரூபாய் செலவில் 360 டன் ஸ்டீல், 114 டன் வெண்கலத்துடன் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அம்பேத்கரின் 132வது பிறந்த நாளை ஒட்டி, இந்த 125 அடி உயர அம்பேத்கர் சிலையை பாரத் ராஷ்ட்ரீய சமிதி தலைவரும், தெலுங்கானா முதல்வருமான சந்திரசேகர ராவ் திறந்து வைத்தார். இந்த சிலை நம் நாட்டில் உள்ள அம்பேத்கர் சிலைகளில் மிக உயரமான சிலை என்பது குறிப்பிடத்தக்கது.

குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபபாய் பட்டேலின் 597 அடி உயர சிலையை வடிவமைத்த சிற்பிகளான ராம் மனோஜ் சுடார், அவருடைய மகன் அணில் ராம் சுடார் ஆகியோர் அம்பேத்கர் சிலையை வடிவமைத்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu