கடந்த ஜூலை மாதத்தில் சந்திரயான் 3 திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்தியது. அப்போது கலத்தை ஏவும் பணி 4 வினாடிகளுக்கு தாமதப்படுத்தப்பட்டது. இந்த தாமதம் எதற்காக நிகழ்ந்தது என்பது குறித்து இஸ்ரோ விளக்கம் அளித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் புதிதாக விண்வெளிக் குப்பைகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அவற்றைக் கணித்து தான் ஒவ்வொரு விண்வெளி திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், விண்வெளி குப்பைகள் மற்றும் செயல் இழந்த செயற்கைக்கோள்கள் உடன் மோதும் வாய்ப்பை தவிர்ப்பதற்காகவே சந்திரயான் 3 திட்டம் 4 வினாடிகளுக்கு தாமதிக்கப்பட்டது. ஒருவேளை இது போன்ற தடுப்புகள் நெருங்கும் பட்சத்தில், கலத்தில் பொருத்தப்பட்டுள்ள மோதல் தடுப்பு அம்சங்கள் கலத்தை பாதுகாத்து இருக்கும். - இவ்வாறு இஸ்ரோ விளக்கம் அளித்துள்ளது.