இந்தியாவின் லட்சிய திட்டமான சந்திரயான் 3 விண்கலம் அடுத்த மாதம் மத்தியில் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறுகையில், இஸ்ரோவின் லட்சிய நிலவு திட்டமான சந்திரயான் 3ஐ விண்ணில் செலுத்துவதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி எம்கே3 மார்க் 3ல் இருந்து விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. இது சந்திர மேற்பரப்பில் பாதுகாப்பாக தரை இறங்குதல் மற்றும் உலாவுதல் மற்றும் லேடர், ரோவர் கட்டமைப்புகளை கொண்டுள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதம் சந்திரயான் 3 விண்கலம் அதன் சோதனை பயணத்தை வெற்றிகரமாக முடித்தது. இதையடுத்து சந்திரயான் 3 அடுத்த மாதம் 12 -19ம் தேதிக்கு இடையில் விண்ணில் ஏவப்படும் என்று சோம்நாத் கூறினார்.