சந்திரயான்-3 விண்கலம் ஜூலை 12-ல் விண்ணில் ஏவப்படும் - இஸ்ரோ

சந்திரயான்-3 விண்கலம் ஜூலை மாதம் 12-ம் தேதி விண்ணில் செலுத்தப்படுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இந்தியாவின் நிலவு திட்டமான சந்திரயான்-3 ஐ விண்ணில் செலுத்துவதற்கான இறுதி கட்ட பணியை முடித்துள்ளது. எனவே சந்திரயான்-3 விண்கலம் ஜூலை 12-ல் இஸ்ரோ விஞ்ஞானிகளால் விண்ணில் ஏவப்பட இருக்கிறது. இந்த ஆண்டு மார்ச் மாதம், சந்திரயான்-3 விண்கலம் அதன் சோதனை பயணத்தை வெற்றிகரமாக முடித்தது. சந்திரயான் திட்டத்தின் ஒரு பகுதியான சந்திரயான்-3, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் […]

சந்திரயான்-3 விண்கலம் ஜூலை மாதம் 12-ம் தேதி விண்ணில் செலுத்தப்படுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இந்தியாவின் நிலவு திட்டமான சந்திரயான்-3 ஐ விண்ணில் செலுத்துவதற்கான இறுதி கட்ட பணியை முடித்துள்ளது. எனவே சந்திரயான்-3 விண்கலம் ஜூலை 12-ல் இஸ்ரோ விஞ்ஞானிகளால் விண்ணில் ஏவப்பட இருக்கிறது.

இந்த ஆண்டு மார்ச் மாதம், சந்திரயான்-3 விண்கலம் அதன் சோதனை பயணத்தை வெற்றிகரமாக முடித்தது. சந்திரயான் திட்டத்தின் ஒரு பகுதியான சந்திரயான்-3, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இந்தியாவின் கனமான ஏவு வாகனமான மார்க்-III இல் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது. இந்த விண்கலம், உந்துவிசை, லேண்டர் மற்றும் ரோவர் ஆகிய 3 அமைப்புகளின் கலவையில் இயக்கப்படுகிறது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu