சந்திரயான் 3 திட்டம் மாபெரும் வெற்றியடைந்ததை தொடர்ந்து சந்திரயான் 4 திட்டத்தில் இஸ்ரோ பணியாற்றி வருகிறது. இந்த திட்டம் குறித்த தகவல்களை இஸ்ரோ தற்போது பகிர்ந்து உள்ளது.
சந்திரயான் 4 திட்டத்தின் மூலம் நிலவிலிருந்து மாதிரிகளை சேகரித்து பூமிக்கு கொண்டு வர இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. சந்திரயான் 4, ஒரு நிலவு தினம் அதாவது பூமியின் 14 நாட்களுக்கு நிலவில் நீடிக்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும், சந்திரயான் 4 மூலம் அனுப்பப்படும் விண்கலம், நிலவில் உள்ள சிவசக்தி புள்ளிக்கு அருகே தரையிறங்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த திட்டம் முழுமையான வெற்றியடையும் பட்சத்தில், நிலவில் இருந்து மாதிரிகளை சேகரித்து வரும் நான்காவது நாடாக இந்தியா வரலாறு படைக்கும்.