ஜப்பானுடன் இணைந்து சந்திராயன் -4 திட்டம்

November 10, 2023

நிலவை நோக்கிய சந்திராயன் திட்டத்தின் அடுத்த செயல்பாடு ஜப்பானுடன் இணைந்து இந்தியா செயல்படுத்த போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திராயன் 3 விண்கலம் நிலவை நோக்கி வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இதனை அடுத்து ஜப்பானுடன் இணைந்து இந்தியா சந்திராயன் 4 திட்டம் செயல்படுத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் லூபெக்ஸ் என அழைக்கப்படும். இந்த திட்டத்தில் ரோபோட் எந்திரங்களை நிலாவிற்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக கடந்த 2017 ஆம் ஆண்டு இந்தியாவின் விண்வெளி […]

நிலவை நோக்கிய சந்திராயன் திட்டத்தின் அடுத்த செயல்பாடு ஜப்பானுடன் இணைந்து இந்தியா செயல்படுத்த போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திராயன் 3 விண்கலம் நிலவை நோக்கி வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இதனை அடுத்து ஜப்பானுடன் இணைந்து இந்தியா சந்திராயன் 4 திட்டம் செயல்படுத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் லூபெக்ஸ் என அழைக்கப்படும். இந்த திட்டத்தில் ரோபோட் எந்திரங்களை நிலாவிற்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக கடந்த 2017 ஆம் ஆண்டு இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமும் ஜப்பானின் விண்வெளி ஆய்வு நிறுவனமும் ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கின்றன. இது குறித்து இந்தியா மற்றும் ஜப்பான் விஞ்ஞானிகள் இடையே விவாதம் நடைபெற்றது. இந்த திட்டம் முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்தியா சார்பில் லேண்டரும், ரோவர் ஜப்பான் சார்பிலும் உருவாக்கப்பட்டு வருகிறது. சந்திராயன் மூன்று திட்டத்தில் அறிவியல் ஆய்வுகள் இணைக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்த அனைத்து தகவல்களும் ஜப்பான் விண்வெளி ஆய்வு மையத்திற்கும் பகிரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த திட்டம் 2025 ஆம் ஆண்டு பிற்பகுதியில் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu