நிலவை நோக்கி வெற்றி பயணம் செல்லும் சந்திராயன் -3

சந்திராயன் - 3 விண்கலம் நிலவின் சுற்றுவட்ட பாதையை நோக்கி வெற்றிகரமாக பயணம் செய்து கொண்டிருக்கிறது. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திராயன் - 3 விண்கலம் நேற்று விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து எல்.வி .எம் -3, எம் 4 ,ராக்கெட் மூலம் சந்திராயன் -3  விண்கலம் ஏவப்பட்டது. இது நிர்ணயிக்கப்பட்ட 179 கிலோமீட்டர் தூரத்தை அடைந்ததும் இலக்கில்  விண்கலம் வெற்றிகரமாக சென்றடைந்தது. இஸ்ரோவின் தரைக்கட்டுப்பாட்டு […]

சந்திராயன் - 3 விண்கலம் நிலவின் சுற்றுவட்ட பாதையை நோக்கி வெற்றிகரமாக பயணம் செய்து கொண்டிருக்கிறது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திராயன் - 3 விண்கலம் நேற்று விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து எல்.வி .எம் -3, எம் 4 ,ராக்கெட் மூலம் சந்திராயன் -3  விண்கலம் ஏவப்பட்டது. இது நிர்ணயிக்கப்பட்ட 179 கிலோமீட்டர் தூரத்தை அடைந்ததும் இலக்கில்  விண்கலம் வெற்றிகரமாக சென்றடைந்தது.

இஸ்ரோவின் தரைக்கட்டுப்பாட்டு நிலையம் பூமியின் சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்ட விண்கலத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தபின் விண்கலமானது 3.84 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலவை நோக்கி வெற்றிகரமாக பயணத்தை தொடங்கியுள்ளது. இதனை இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் . மேலும் இது ஆகஸ்ட் 5ஆம் தேதி நிலவின் சுற்றுப் பாதையை அடையும் .நிலவின் ஈர்ப்பு விசையின் துணையுடன் சுற்றுவட்ட பாதையில் விண்கலம் இயங்கும். நிலவின் சுற்றுப் பாதையை சுற்றி வந்து ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவில் விண்கலம் தரையிறங்கும்.

கடந்த 2008 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட சந்திராயன்  விண்கலம்-1 திட்டம் வெற்றி பெற்றது 2019ஆம் ஆண்டு ஏவப்பட்ட சந்திராயன் -2 விண்கலம் வெற்றி பெறவில்லை. லேண்டர் நிலவில் மோதியதால் தொடர்புகளை இழந்தது. இஸ்ரோ விஞ்ஞானிகள் கடந்த கால இழப்புகளை  கருத்தில் கொண்டு சந்திராயன் - 3 விண்கலத்தை வடிவமைத்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu