பெண் ஓய்வூதியதாரர்களுக்கு பென்ஷன் விதிமுறையில் மாற்றம்

January 3, 2024

அரசு பெண் ஊழியர்கள் தனது கணவருக்கு பதிலாக தனது வாரிசுகளுக்கு குடும்ப ஓய்வூதியம் கிடைக்க செய்யலாம் என திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மத்திய சிவில் சர்வீசஸ் விதிமுறைகள் 2021- இன் 50வது விதிமுறைப்படி ஒரு அரசு ஊழியர் அல்லது ஓய்வூதியம் பெறும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் அவரது மரணத்திற்குப் பின்பு அவருடைய ஓய்வூதிய தொகையை அவரது கணவர் அல்லது மனைவிக்கோ வழங்கப்பட்டு வருகிறது. ஒருவேளை வாழ்க்கை துணைக்கு தகுதி இல்லாவிட்டால் அவரது மரணத்திற்கு பிறகு வாரிசு அடிப்படையில் […]

அரசு பெண் ஊழியர்கள் தனது கணவருக்கு பதிலாக தனது வாரிசுகளுக்கு குடும்ப ஓய்வூதியம் கிடைக்க செய்யலாம் என திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

மத்திய சிவில் சர்வீசஸ் விதிமுறைகள் 2021- இன் 50வது விதிமுறைப்படி ஒரு அரசு ஊழியர் அல்லது ஓய்வூதியம் பெறும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் அவரது மரணத்திற்குப் பின்பு அவருடைய ஓய்வூதிய தொகையை அவரது கணவர் அல்லது மனைவிக்கோ வழங்கப்பட்டு வருகிறது. ஒருவேளை வாழ்க்கை துணைக்கு தகுதி இல்லாவிட்டால் அவரது மரணத்திற்கு பிறகு வாரிசு அடிப்படையில் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு பெண் ஊழியர்கள் தங்கள் ஓய்விற்கு பின் ஓய்வூதியம் கணவருக்கு பதிலாக தங்களது வாரிசுகளுக்கு கிடைக்க செய்யலாம் என்று ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர்கள் நலத்துறை திருத்தம் செய்துள்ளது. மேலும் கணவருக்கு எதிராக பெண் ஊழியர் தொடர்ந்த விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருந்தாலும், குடும்ப வன்முறை தடுப்பு சட்டம், இந்திய தண்டனை சட்டம் ஆகியவற்றின் கீழ் கணவருக்கு எதிராக அவர் புகார் அளித்திருந்தாலோ அத்தகைய பெண் ஊழியர்கள் கணவருக்கு பதிலாக குழந்தைகளுக்கு குடும்ப ஓய்வூதியம் அளிக்குமாறு எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu