தமிழகத்தில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மாற்றம் – அரசு செய்தித்தொடர்பாளர்களாக நான்கு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது பதவிக்கு எம்.எம். ஸ்ரீவஸ்தவா நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசு முக்கியத் துறைகளின் தகவல்களை ஊடகங்கள் மூலம் மக்களிடம் விரைவாகவும் தெளிவாகவும் கொண்டு செல்லும் நோக்கில் நான்கு உயர் நிலை ஐஏஎஸ் அதிகாரிகளை செய்தித் தொடர்பாளர்களாக நியமித்துள்ளது. ராதாகிருஷ்ணன், ககன்தீப் சிங் பேடி, தீரஜ்குமார், அமுதா ஆகியோருக்கு ஒவ்வொரு துறையையும் பொறுப்பாக ஒதுக்கி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அதிகாரிகள் தலைமைச் […]

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது பதவிக்கு எம்.எம். ஸ்ரீவஸ்தவா நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசு முக்கியத் துறைகளின் தகவல்களை ஊடகங்கள் மூலம் மக்களிடம் விரைவாகவும் தெளிவாகவும் கொண்டு செல்லும் நோக்கில் நான்கு உயர் நிலை ஐஏஎஸ் அதிகாரிகளை செய்தித் தொடர்பாளர்களாக நியமித்துள்ளது. ராதாகிருஷ்ணன், ககன்தீப் சிங் பேடி, தீரஜ்குமார், அமுதா ஆகியோருக்கு ஒவ்வொரு துறையையும் பொறுப்பாக ஒதுக்கி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அதிகாரிகள் தலைமைச் செயலாளரின் ஆலோசனையின் அடிப்படையில் ஊடகங்களை சந்தித்து அரசுத் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து சரியான தகவல்களை வழங்குவார்கள் என அரசு தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu