சென்னை சென்ட்ரல் மற்றும் அரக்கோணம் இடையே மின்சார ரெயில் சேவையில் பராமரிப்பு காரணமாக சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன.
சென்னை சென்ட்ரல் மற்றும் அரக்கோணம் இடையே மின்சார ரெயில் சேவையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால், 25-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை ஆவடி பணிமனையில் இரவு 12.30 மணி முதல் 3.30 மணி வரை சேவைகள் ரத்து செய்யப்படவுள்ளது. அதேபோல் மூர் மார்க்கெட்டில் இருந்து இரவு 12.15 மணிக்கு புறப்படும் ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து வரும் ரெயில்கள் பகுதி நேர ரத்து செய்யப்படுகின்றன.