வணிக சிலிண்டர் விலையில் மாற்றங்கள்

December 2, 2024

வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை சென்னையில் ரூ.16 அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலைகள், சர்வதேச சந்தையின் நிலவரத்தையும், இந்திய பணத்தின் மதிப்பையும் பொருட்படுத்தி எண்ணெய் நிறுவனங்களால் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த விலைகள் மாதந்தோறும் மாற்றங்களை சந்திக்கின்றன. வீட்டு பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை கடந்த சில மாதங்களாக மாற்றமின்றி இருந்தாலும், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை அதிகரித்துள்ளது. அதன்படிசென்னையில், வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ.16 உயர்ந்து, ரூ.1,980.50-ஆக நிர்ணயம் […]

வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை சென்னையில் ரூ.16 அதிகரித்துள்ளது.

பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலைகள், சர்வதேச சந்தையின் நிலவரத்தையும், இந்திய பணத்தின் மதிப்பையும் பொருட்படுத்தி எண்ணெய் நிறுவனங்களால் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த விலைகள் மாதந்தோறும் மாற்றங்களை சந்திக்கின்றன. வீட்டு பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை கடந்த சில மாதங்களாக மாற்றமின்றி இருந்தாலும், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை அதிகரித்துள்ளது. அதன்படிசென்னையில், வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ.16 உயர்ந்து, ரூ.1,980.50-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி ரூ.818.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.61.50 அதிகரித்திருந்தது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu