மெட்ரோ இன்று சேவையில் மாற்றங்கள் பயணிகள் வசதிக்காக மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரெயில் நிர்வாகம், ஆயுத பூஜை விடுமுறைக்கான பயணிகளுக்கு சிறந்த வசதிகளை வழங்க, சேவையில் சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி இன்று, காலை 8 மணி முதல் 11 மணி மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை ரெயில்கள் 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். காலை 5 மணி முதல் 8 மணி, 11 மணி முதல் 5 மணி மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 7 நிமிட இடைவெளியில் ரெயில்கள் செயல்படும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை, 15 நிமிட இடைவெளிக்கு பதிலாக 7 நிமிட இடைவெளியில் ரெயில்கள் இயக்கப்படும். இந்த மாற்றங்கள், வெளியூர் செல்லும் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தும்.