செந்தில் பாலாஜி வழக்கின் குற்றப்பத்திரிக்கை தாக்கல்

August 31, 2023

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினால் கைது செய்யப்பட்டார். இன்று அவருக்கு எதிரான குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமலாக்க துறையினால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக செந்தில்பாலாஜியின் உதவியாளர்கள் பலரிடம் சட்ட விரோதமாக பணத்தை பெற்றுள்ளனர். இவற்றை தனது உறவினர்கள், சகோதரர்கள் பெயரில் வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்துள்ளார். இந்த பண பரிமாற்றம் தொடர்பாக அவர் உதவியாளர்களின் மின்னஞ்சல் மூலம் சில தகவல்களும் கிடைத்துள்ளன. […]

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினால் கைது செய்யப்பட்டார். இன்று அவருக்கு எதிரான குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அமலாக்க துறையினால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக செந்தில்பாலாஜியின் உதவியாளர்கள் பலரிடம் சட்ட விரோதமாக பணத்தை பெற்றுள்ளனர். இவற்றை தனது உறவினர்கள், சகோதரர்கள் பெயரில் வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்துள்ளார். இந்த பண பரிமாற்றம் தொடர்பாக அவர் உதவியாளர்களின் மின்னஞ்சல் மூலம் சில தகவல்களும் கிடைத்துள்ளன. இதில் செந்தில் பாலாஜி குற்ற செயல்களில் திட்டமிட்டு ஈடுபட்டதற்கான டிஜிட்டல் ஆதாரங்கள், ஆவணங்கள் கிடைத்துள்ளன.

இதன் மூலம் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்றத்தில் முக்கிய புள்ளியாக இருந்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. இவர் அவரது சகோதரர், உதவியாளர்கள், போக்குவரத்து அதிகாரிகளுடன் சேர்ந்து பணம் ஈட்டுவதற்கான வழிகளை கூறி உதவியுள்ளார். இதில் செந்தில் பாலாஜிக்கு தொடர்பு இல்லை என்று கூறினாலும் அவரின் பொறுப்பிற்கு கீழ் தான் அனைத்து முறைகேடுகளும் நடைபெற்றுள்ளது என்பதற்கான ஆதாரம் உள்ளன. மேலும் தனது சகோதரர் மற்றும் கூட்டாளியுடன் சேர்ந்து வெளிநாட்டவர்களுக்கு பணம் அனுப்பியதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன. அதேபோன்று இந்த முறைகேடு நடைபெற்ற ஆண்டிலும் அதற்கு அடுத்த ஆண்டிலும் உள்ள வருமானத்தை ஒப்பிடும் பொழுது மிகப்பெரிய அளவிலான முறைப்பாடு ஏற்பட்டுள்ளது. இதில் வருமான கணக்கை ஒப்பிட்டு பார்க்கும்போது முரண்பாடுகள் உள்ளன. இதற்கான காரணம் என்ன என்பதற்கான ஆதாரங்களும் உள்ளன. இதில் செந்தில் பாலாஜி தங்கள் அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்தி சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளார்.
இவ்வாறு பல்வேறு தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu