மெட்டாவின் வாட்ஸ் அப்பில் சாட்-ஜிபிடி சேவை அறிமுகமாகியுள்ளது. இதன் மூலம், பயனர்கள் வாட்ஸ்அப்பிலேயே ஏஐ உடன் உரையாடலாம். முதற்கட்டமாக அமெரிக்கா மற்றும் கனடாவில் அறிமுகமாகியுள்ள இந்த சேவை, விரைவில் இந்தியாவிலும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே மெட்டா ஏஐ வசதி உள்ள வாட்ஸ்அப் பயன்பாட்டில், புதிதாக அறிமுகமாகும் சாட் ஜிபிடி சேவைக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாட்-ஜிபிடியை உருவாக்கிய ஓபன் ஏஐ நிறுவனத்தின் முன்னாள் ஆராய்ச்சியாளர் சமீபத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்த சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.