சீன அதிபர் ஜி ஜிங் பிங்கின் அரசியல் சித்தாந்தங்கள் மற்றும் கொள்கைகளை பறைசாற்றும் விதமாக, புதிய செயற்கை நுண்ணறிவு சாட் பாட் கருவியை சீனா உருவாக்கி உள்ளது. இதற்கு Chat Xi PT என்று பெயரிட்டுள்ளது.
சீனாவின் சைபர் நிர்வாகத்தின் கீழ் Chat Xi PT கருவி உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தக் கருவி கொடுக்கும் பதில்கள் பரிசோதனை செய்யப்பட்டு மேம்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் சைபர் நிர்வாகத்தின் சமூக ஊடக பதிவில் இந்த தகவல்கள் பகிரப்பட்டுள்ளது. இந்தக் கருவி, கேள்விகளுக்கு பதில் அளிக்கும்; கொடுக்கப்பட்ட தகவல்களை தொகுத்து வழங்கும்; ஆங்கிலம் மற்றும் சீன மொழியில் மொழிபெயர்ப்பு சேவைகளை வழங்கும். சீனாவை பொறுத்தவரை, நாட்டின் தலைமைக்கு எதிராக எந்தவித தரவுகளும் பகிரப்பட மாட்டாது. அந்த வகையில், அலிபாபா பைது போன்ற நிறுவனங்கள் மிகவும் கவனமாக தங்களது செயற்கை நுண்ணறிவு சாட் பாட் கருவிகளை உருவாக்கி வருகின்றன. இந்த சூழலில், நாட்டின் சைபர் நிர்வாகம் சார்பில் தலைமையின் அரசியல் சித்தாந்தங்களை பிரதிபலிக்கும் சாட் பாட் உருவாக்கப்பட்டுள்ளது.