கூகுள் நிறுவனத்தில் ஆரம்ப நிலை கோடிங் பணிகளை மேற்கொள்ள ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. ஆரம்ப நிலை கோடிங் பணிகளை மேற்கொள்வதற்கான தகுதியை சாட் ஜிபிடி பெற்றுள்ளதாகவும், அதனை கூகுள் நிறுவனம் சோதித்துப் பார்க்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள சாட் ஜிபிடி, கோடிங் செய்தல், தேர்வு எழுதுதல் போன்ற பல்வேறு பரிசோதனைகளை வெற்றிகரமாக கடந்துள்ளது. இந்நிலையில், மனிதர்களுக்கு இணையாக படைப்பாற்றல் மற்றும் உணர்திறன் கொண்ட வேலைகளை இதனால் செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனம் வடிவமைத்து வரும் பீட்டா பயன்பாட்டில், சாட் ஜிபிடியின் திறன் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் செயற்கை நுண்ணறிவு பாட் உடன் சாட் ஜிபிடி ஒப்பிட்டாய்வு செய்யப்பட்டதில், எல் 3 பணிக்கு தகுதி பெற்றதாக சொல்லப்படுகிறது.














