உலக அளவில் முடங்கிய சாட் ஜிபிடி - ஆயிரக்கணக்கானோர் புகார்

உலக அளவில் பிரபலமான செயற்கை நுண்ணறிவு சாட் பாட் கருவி சாட் ஜிபிடி ஆகும். இந்த கருவி சர்வதேச அளவில் முடங்கியது. செயலியை இயக்குவதில் சிக்கல் உள்ளதை ஓபன் ஏஐ நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது. சிக்கலை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளது. இன்று மதியம் ஒரு மணி அளவில், பெரும்பாலான பயனர்கள் சாட் ஜிபிடி செயல்பாடுகள் முடங்கியதாக புகார் தெரிவித்துள்ளனர். புகார் தெரிவித்தவர்களில் 81% பயனர்கள் சாட் ஜிபிடியை அனைத்து வழிகளிலும் அணுகுவதில் சிக்கல் […]

உலக அளவில் பிரபலமான செயற்கை நுண்ணறிவு சாட் பாட் கருவி சாட் ஜிபிடி ஆகும். இந்த கருவி சர்வதேச அளவில் முடங்கியது. செயலியை இயக்குவதில் சிக்கல் உள்ளதை ஓபன் ஏஐ நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது. சிக்கலை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளது.

இன்று மதியம் ஒரு மணி அளவில், பெரும்பாலான பயனர்கள் சாட் ஜிபிடி செயல்பாடுகள் முடங்கியதாக புகார் தெரிவித்துள்ளனர். புகார் தெரிவித்தவர்களில் 81% பயனர்கள் சாட் ஜிபிடியை அனைத்து வழிகளிலும் அணுகுவதில் சிக்கல் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும், 14% பேர் ஓபன் ஏஐ வலைத் தளத்தை அணுகுவதில் சிக்கல் இருந்ததாக தெரிவித்துள்ளனர். 5% பேர் சாட் ஜிபிடி செயலியை இயக்குவதில் சிக்கல் உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், மதியம் 2 மணி அளவில், சிக்கல் ஏற்பட்டதற்கான காரணத்தை கண்டறிந்து விட்டதாகவும், அதை சரி செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் ஓபன் ஏஐ தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu