டீப்சீக் போட்டியாக டீப் ரிசர்ச் - சாட் ஜிபிடி பதிலடி

February 4, 2025

சீனாவின் டீப்சீக் தொழில்நுட்பத்துக்கு போட்டியாக, ஓபன் ஏஐ நிறுவனம் சாட் ஜிபிடியில் ‘டீப் ரிசர்ச்’ எனும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. ஒரு குறிப்பிட்ட தலைப்பில் மிக ஆழமான ஆய்வறிக்கைகளை உருவாக்கி வழங்கும் திறன் கொண்டதாக இது விளங்குகிறது. நூற்றுக்கணக்கான மூலங்களில் இருந்து தகவல்களை பகுப்பாய்வு செய்து, விரிவான தகவல்களை தொகுத்து, அனைவருக்கும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய தேடு பொறிகளின் பதில்களை விட, ‘டீப் ரிசர்ச்’ வழங்கும் தகவல்கள் மிகவும் உபயோகமானவை […]

சீனாவின் டீப்சீக் தொழில்நுட்பத்துக்கு போட்டியாக, ஓபன் ஏஐ நிறுவனம் சாட் ஜிபிடியில் ‘டீப் ரிசர்ச்’ எனும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. ஒரு குறிப்பிட்ட தலைப்பில் மிக ஆழமான ஆய்வறிக்கைகளை உருவாக்கி வழங்கும் திறன் கொண்டதாக இது விளங்குகிறது. நூற்றுக்கணக்கான மூலங்களில் இருந்து தகவல்களை பகுப்பாய்வு செய்து, விரிவான தகவல்களை தொகுத்து, அனைவருக்கும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய தேடு பொறிகளின் பதில்களை விட, ‘டீப் ரிசர்ச்’ வழங்கும் தகவல்கள் மிகவும் உபயோகமானவை என ஓபன் ஏஐ கூறுகிறது. சாட் ஜிபிடி புரோ பயனர்களுக்கே இது கிடைக்கிறது, மேலும் மாதத்திற்கு 100 கேள்விகள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் இது மேலும் விரிவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘டீப் ரிசர்ச்’ மூலம், நிதி, அறிவியல், கொள்கைகள் போன்ற துறைகளில் பணியாற்றும் நிபுணர்கள் ஆழமான ஆய்வறிக்கைகளை பெறலாம். உதாரணமாக, இந்தியாவில் அதிகம் விற்கப்படும் இருசக்கர வாகனம் குறித்து தேடினால், இது விரிவான தரவுகளின் அடிப்படையில் விளக்கமளிக்கும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu